அடுத்த வாரம் நடைபெரும் எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி புதிய சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக இந்த சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் அசத்தலான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என உறுதிபடுத்தியுள்ளது, அதன்படி இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post