அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மோதி விபத்து நடந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது. அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் பட்டாசுகளும் வெடித்தன. அப்போது பெரிய பெரிய தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறி ஓடியபோது, ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் அவர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 72 பேர் குருநானக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இந்த விழாவை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சித்துவின் மனைவி கலந்து கொண்டார். எனினும் விபத்து நடந்த போதிலும் அவர் தன் பேச்சை நிறுத்தாமல் இருந்தார் என்று கூறப்படுகிறது.



Post a Comment

أحدث أقدم