சென்னை: பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் நடிகை ரித்விகா வென்றுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 2 நேற்றோடு நிறைவு பெற்றுள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று டைட்டிலை அவர் தட்டிச் சென்றுள்ளார். மக்களின் அமோக ஆதரவை அவர் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதோ அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ப் பெண்:

நல்ல களையான திராவிட முகம் ரித்விகாவிற்கு. தமிழ்ப் பெண்களுக்கே உரிய சில பொதுவான குணாதிசியங்கள் பிக் பாஸ் வீட்டில் ரித்விகாவிடமே அதிகமாகக் காணப்பட்டது. இதனை வெளியில் இருந்த மக்கள் மட்டுமல்ல, வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுமே ஒப்புக் கொண்டனர்.

பிடித்தமான பெண்:

நேர்மையான, நடுத்தரக் குடும்பத்து பெண்ணாகவே தன்னை பிக் பாஸ் வீட்டில் காட்டிக் கொண்டார். ஒவ்வொரு முறை தனக்கு கிடைத்த வாய்ப்பின் போதும் தான் பட்ட கஷ்டங்களை அவர் மக்களிடம் பகிர்ந்து கொண்டார். அது பெரும்பாலும் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ கடந்து வந்த பிரச்சினைகளாகத்தான் இருக்கும். இதனாலேயே எல்லாருக்கும் பிடித்தமான பெண் ஆனார் ரித்து.


1 Comments

Post a Comment

Previous Post Next Post